×

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி மற்றும் வலை உள்ளிட்டவை கொள்ளை

நாகை: நாகை செருதூர் கிராம மீனவர்கள் பைபர் படகில் கோடியக்கரை இருந்து 15 நாட்டிகல் தென் கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரும்பு கம்பி மற்றும் கட்டையால் மீனவர்களை தாக்கி கொள்ளையர்கள், மீனவர்களிடம் இருந்து ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி மற்றும் வலை உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நாகப்பட்டினம் செருதூர் கிராம மீனவர்கள் பைபர் படகில் கோடியக்கரை இந்து 15 நாட்டிகல் தென்கிழக்கே கடலில் நேற்று இரவு மீன்பிடிக்கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் இரும்பு கம்பி, கட்டையால் மீனவர்களை கடுமையாக தாக்கினர். மீனவர்களிடமிருந்து ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி மற்றும் வலை உள்ளிட்ட 2 லட்சம் மதிப்பிலான பொருள்களை கொள்ளையடித்து சென்றனர்.கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் முருகன் என்பவர் காயமடைந்தார். இதையடுத்து, அவரை மீட்ட சக மீனவர்கள் முருகனை நாகைப்பட்டனம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மீனவர்கள் படகுகளை வழிமறித்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி மற்றும் வலை உள்ளிட்டவை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Nagai ,Nagai Cherudur ,Kodiakara ,Piper boat ,
× RELATED கோடியக்கரை அருகே மீன் பிடித்துக்...